சென்னை: 2025-26-ம் நிதி ஆண்டு தமிழக பட்ஜெட்டுக்கு இந்திய பம்பு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கே.வி.கார்த்திக் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: பம்பு மோட்டார் தொழில் துறையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வித்திடும் வகையில், உயர் தொழில்நுட்ப பம்பு மோட்டார் உற்பத்திக்கான " உயர்திறன் மையம்" அமைக்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது.