கோவை: கோவை மாவட்டம் மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை குடமுழுக்கு நடைபெறும் நிலையில் ரூ. 4 இலட்சம் மதிப்பிலான வெள்ளிவேல் திருட்டு என்று செய்திகள் வெளிவந்துள்ளன. மருதமலை அடிவாரத்தில் அமைந்துள்ள மருதமலை அடிவார வேல் கோட்ட தியான மண்டபத்தில் நேற்று இரவு சுமார் 11.45 மணியளவில் 3 கிலோ 100 கிராம் எடையுள்ள வெள்ளி வேல் கொள்ளையர்களால் திருடப்பட்ததாக கூறப்படுகிறது.
இது தனியாருக்கு சொந்தமான தியான மண்டபம், இதன் நிர்வாகியாக திரு. குருநாதசாமி என்பவர் இருந்து வருகிறார். மேலும் தியான மண்டபத்தில் வெள்ளி வேல் மட்டுமே இருந்து தியானம் செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. தியான மண்டபமானது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது இல்லை. மேலும் இச்சம்பவம் மருதமலை திருக்கோயிலில் நடைபெறவில்லை என இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் திரு. பி.ரமேஷ் விளக்கமளித்துள்ளார்.
The post மருதமலை கோயிலில் திருட்டு நடக்கவில்லை: இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் விளக்கம் appeared first on Dinakaran.