மருதமலை அடிவாரத்தில் வீடு புகுந்து நாய் குட்டியை கவ்விச்சென்ற சிறுத்தை

2 weeks ago 2

 

கோவை, ஜன. 26: கோவை வனச்சரகம், மருதமலை சுற்றுக்கு உட்பட்ட மூனுகல் சரகம், போளுவாம்பட்டி பிளாக்-3 வன எல்லையை ஒட்டி சுமார் 100 மீட்டர் தொலைவில் மருதமலை அடிவாரத்தில் சந்திரன்-வள்ளி தம்பதியினர் வீடு உள்ளது. இவர்களது வீட்டு வளாகத்திற்குள், நேற்று இரவு 9.30 மணியளவில் சிறுத்தை ஒன்று திடீரென புகுந்தது. வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாய்க்குட்டியை கவ்விக்கொண்டு, மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

நாய்க்குட்டியின் கதறல் கேட்டு, அக்கம் பக்கத்தினர் எழுந்து வந்தனர். ஆனால், அதற்குள் சிறுத்தை வனத்துக்குள் சென்று, பதுங்கியது. இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், துப்பாக்கியுடன் அப்பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். ஆனால், சிறுத்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி வனத்துறையினர் கூறுகையில், ‘’சிறுத்தை கால் தடம் தென்படவில்லை. இருப்பினும் தொடர்ந்து சிறுத்தையை கண்காணித்து வருகிறோம்’’ என்றனர்.

The post மருதமலை அடிவாரத்தில் வீடு புகுந்து நாய் குட்டியை கவ்விச்சென்ற சிறுத்தை appeared first on Dinakaran.

Read Entire Article