தானே,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கொங்கான் பகுதியில் வசிக்கும் சில குடியிருப்பாளர்கள் மின்கம்பங்களில் இருந்து சர்வீஸ் வயர்களின் மூலம் நேரடியாக மின்சாரத்தை பயண்படுத்தி வந்தனர். இதன் மூலம் மின்சார வாரியத்திற்கு சுமார் ஒரு வருடத்திற்கு மின் கட்டணம் செலுத்தாமல் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ஜனவரி 31ஆம் தேதி அன்று மராட்டிய மின் விநியோக அதிகாரிகள் கொங்கன் பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள சிலர் சர்வீஸ் வயர்களின் மூலம் மின்சாரத்தை நேரடியாக பெற்றுக்கொண்டதை கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் மின்சார மீட்டர்களை பயண்படுத்தாமல் நேரடியாக மின்சாரத்தை பெற்று ரூ.5.35 லட்சத்திற்கு மேலாக மின்சாரத்தை திருடியதாக 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சாந்தி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.