மும்பை,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இதற்கிடையில், இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். மும்பையில் டென்னிஸ் பால் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்ததாக தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். தொடர்ந்து மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து போட்டியை காண ரிஷி சுனக் வருகை தந்தார். அங்கு இரு அணிகளின் கேட்பன்கள் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜாஸ் பட்லரை சந்தித்து பேசிய ரிஷி சுனக், ஆட்டத்தை உற்சாகத்துடன் கண்டு களித்து வருகிறார்.