தேனியில் முதல் முறையாக 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி - பொதுமக்கள் கொண்டாட்டம்

1 month ago 6

தேனி,

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் ஞாயிற்றுக்கிழமை 'ஹேப்பி ஸ்ட்ரீட்' என்ற பெயரில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்காக நடத்தப்பட்டு வரும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சிக்கு மாணவர்கள், வேலைக்கு செல்வோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதனை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் முதல் முறையாக 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. முத்துதேவன்பட்டி வீரபாண்டி சாலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், விளையாட்டு, மேஜிக் ஷோ, உள்ளிட்ட பல அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பரதநாட்டியம், இசை நிகழ்ச்சி என நிகழ்ச்சி களைகட்டியது. இதில் பொதுமக்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு நடனமாடி மகிழ்ந்தனர். 

Read Entire Article