மராட்டியத்தில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்காளதேசத்தினர் 9 பேர் கைது

4 months ago 8

மும்பை,

வங்காளதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடும்பமாக நுழையும் நபர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாற்று பெயர், அடையாள அட்டையும் வசித்து வருகின்றனர். அந்த நபர்களை கைது செய்ய மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், மராட்டிய மாநிலத்தில் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக வசித்துவருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

மும்பை, நாசிக், நந்திட், சத்ரபதி சம்பாஜிநகர் ஆகிய பகுதிகளில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் உரிய ஆவணமின்றி சட்டவிரோதமாக வசித்து வந்த வங்காளதேசத்தை சேர்ந்த 9 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 8 பேர் ஆண்கள் ஆவர். இவர்கள் போலி ஆவணங்கள் மூலம் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை பெற்றது தெரியவந்தது. இதையடுத்து 9 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த மாதத்தில் மட்டும் மராட்டியத்தில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்காளதேசத்தை சேர்ந்த 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article