தேவையான பொருட்கள்
1/4கிலோ மரவள்ளி கிழங்கு
1/2கப் பஜ்ஜி மாவு
1/2லிட்டர் எண்ணெய்
1வெங்காயம்
1/4டீஸ்பூன் மிளகாய் தூள்
1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
1டேபிள் ஸ்பூன் எண்ணெய்
1/4டீஸ்பூன் கடுகு
1/2டீஸ்பூன் கடலை பருப்பு
ஒரு சிறிய துண்டு இஞ்சி
மல்லி இலை
கறிவேப்பிலை
தேவையான அளவுஉப்பு
செய்முறை:
மரவள்ளி கிழங்கை வேக வைத்து தோல் உரித்து,பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.வெங்காயம், கறிவேப்பிலை, மல்லி இலை நறுக்கி வைக்கவும்.ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து வதக்கி,பின்னர் வெங்காயம் கறிவேப்பிலை,மல்லி இலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.மிளகாய் தூள் மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் தயாராக வைத்துள்ள மரவள்ளி கிழங்கு நன்கு மசித்து சேர்த்து நன்கு வதக்கவும். ஐந்து நிமிடங்கள் ஆற வைக்கவும்.அந்த நேரத்தில் பஜ்ஜி மாவை எடுத்து ஒரு பௌலில் சேர்த்து,தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.பின்னர் மசாலாவை எடுத்து உருண்டைகளாக உருட்டி,கட்லட் போல் அழுத்தி கரைத்து வைத்துள்ள பஜ்ஜி மாவில் முக்கி,வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.பொறித்த பாஜ்ஜிகளை எடுத்து ஒரு பரிமாறும் தட்டில் வைக்கவும். இப்போது மிகவும் சுவையான சத்தான மரவள்ளி கிழங்கு பஜ்ஜி சுவைக்கத்தயார்.சுவையான சத்தான இந்த மரவள்ளி கிழங்கு பஜ்ஜி அல்லது போண்டாவை அனைவரும் செய்து சுவைக்கவும்.
The post மரவள்ளி கிழங்கு பஜ்ஜி appeared first on Dinakaran.