மரத்தில் கார் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

2 months ago 11

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள நஹ்தார் பகுதியில் நேற்று முன்தினம் இரவு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. சுல்தான் என்பவர் காரை ஓட்டினார். காரில் சுல்தானின் மனைவி குலாப்ஷா (28 வயது), மகள்கள் அனாடியா (8 வயது), அலிசா (6 வயது), மகன் ஷாத் (5 வயது) மற்றும் சுல்தானின் தங்கை சந்த் பானோ (35 வயது), அவரது மகள் அதிபா (14 வயது) ஆகியோர் இருந்தனர்.

சாலையில் அதிவேகமாக சென்ற கார் திடீரென டிரைவர் சுல்தானின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தறிக்கெட்டு ஓடிய கார் சாலையோரம் உள்ள மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் சுல்தானின் மனைவி, 2 மகள்கள் மற்றும் சுல்தானின் தங்கை ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சுல்தான், அவரது மகன் மற்றும் மருமகள் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

மரத்தில் கார் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article