மரத்தின் மீது கார் மோதி விபத்து - 3 பேர் பலி

3 hours ago 2

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டம் நிஹ்லாலு பகுதியில் இருந்து குஷிநகர் மாவட்டத்திற்கு நேற்று இரவு கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் ராகேஷ் (வயது 23), சோபித் (வயது 30), தேவானந்த் (வயது 28) ஆகிய 3 பேர் பயணித்தனர். உறவினர்களை சந்தித்துவிட்டு 3 பேரும் காரில் குஷிநகரில் உள்ள தங்கள் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தனர்.

நள்ளிரவு குஷிநகர் மாவட்டத்தின் பஹுவார் கிராமம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 3 பேரும் உயிரிழந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article