மரங்களை அழித்த விவகாரம் தெலங்கானா அரசுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

5 days ago 2

புதுடெல்லி: காங்சா கச்சிபவுலி காட்டை மீட்டெடுக்காவிட்டால் அரசு அதிகாரிகள் சிறைக்கு செல்ல நேரிடும் என்று தெலங்கானா அரசை உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது. தெலங்கானா அரசு சுமார் 400 ஏக்கபர் பரப்பளவிலான காங்சா கச்சிபவுலி காட்டுப்பகுதியை தொழிற்சாலைகளுக்கு ஏலம் விடுவதற்கு திட்டமிட்டது. இதற்கான நடவடிக்கைகள் மார்ச் 30ம் தேதி தொடங்கப்பட்டது. காட்டில் இருந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் அழிக்கப்பட்டது. காட்டிற்கு அருகில் அமைந்துள்ள ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம் ஏப்ரல் 3ம் தேதி காட்டை அழிப்பதற்கு அரசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பிஆர் கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமர்வு, ‘‘மரங்களை வெட்டும் நடவடிக்கைகள் அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக தெரிகிறது. வார இறுதியில் நீதிமன்ற விடுமுறையை பயன்படுத்தி மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. காடுகளை தெலங்கானா அரசு மீட்டெடுக்க வேண்டும். இல்லையெனில் அதன் அதிகாரிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள்” என்று எச்சரித்தனர்.

The post மரங்களை அழித்த விவகாரம் தெலங்கானா அரசுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article