மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் வம்பாமேடு பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் விஷச் சாராயம் அருந்தி எக்கியார்குப்பத்தைச் சேர்ந்த 14 பேரும், அருகில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 பேரும் உயிரிழந்தனர். இவர்களின் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாதா, மதுவிலக்கு டிஎஸ்பி பழனி, மற்றும் மரக்காணம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருள் வடிவழகன், எஸ்.ஐ.க்கள் தீபன், சீனிவாசன் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் மரிய சோபி மஞ்சுளா, எஸ்.ஐ. சிவகுருநாதன், மரக்காணம் போலீஸ் நிலைய ஏட்டு மகாலிங்கம், தனிப்பிரிவு ஏட்டு ரவி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.