மரக்காணம் பகுதியில் அலைகளின் சீற்றத்தால் கரையோரம் மண்ணரிப்பு

4 hours ago 2

மரக்காணம்: வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி காரணமாக கடற்கரையையொட்டி உள்ள பல மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மிதமான மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இந்த காற்று சுழற்சி அடுத்த நாட்களில் காற்றழுத்த பகுதியாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க ஆழ் கடலுக்கு செல்லக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு முதல் மரக்காணம் பகுதி கடலில் சீற்றம் அதிகரித்துள்ளது. இந்த சீற்றத்தால் கடல் அலைகள் சுமார் 10 மீட்டர் உயரத்திற்கு தரைப்பகுதியை நோக்கி வருகிறது. இதன் காரணமாக கடற்கரை ஓரம் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோல் இந்த கடல் அலை சீற்றத்தால் மரக்காணம் பகுதியில் உள்ள பெரும்பாலான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீனவர்கள் தங்களது பைபர் படகு மற்றும் மீன்பிடி சாதனங்களை கடற்கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

The post மரக்காணம் பகுதியில் அலைகளின் சீற்றத்தால் கரையோரம் மண்ணரிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article