சென்னை: புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் திருக்கோயிலுக்கு ரூ.81 லட்சம் மதிப்பில் செய்யப்பட்டுள்ள புதிய மரத்தேரின் வெள்ளோட்டத்தினை இன்று (மே 25) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, "800 ஆண்டுகள் பழமையான கங்காதேசுவரர் திருக்கோயிலுக்கு 16 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.4.82 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. சட்டமன்ற அறிவிப்பின்படி இத்திருக்கோயிலுக்கு ரூ.7 கோடி மதிப்பீட்டில் புதிய தங்கத்தேர் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.