சென்னை கொடுங்கையூர் எரி உலை திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஜூன் 2ல் கண்டன ஆர்ப்பாட்டம்: அதிமுக அறிவிப்பு

5 hours ago 3

சென்னை: வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தின் சார்பில், ஜூன் 2ம் தேதி, திமுக அரசை கண்டுத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழகத்தில் ஒரு அலங்கோல ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் மக்கள் பல்வேறு வகைகளில் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மக்கள் நிம்மதியுடன் வாழ்வதற்கான சூழலை இந்த அரசு ஏற்படுத்தவில்லை. தற்போதைய அரசு முற்றிலும் செயலிழந்த அரசாக விளங்கி வருகிறது. ஜெயலலிதாவின் ஆட்சியில், மக்கள் நலன் கருதி கொண்டுவரப்பட்ட பல்வேறு முத்தான திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு திமுக அரசு முடக்கியும், நீர்த்துப்போகவும் செய்து வருவது, வேதனைக்குரிய விஷயமாகும்.

Read Entire Article