
சென்னை மயிலாப்பூரில் உள்ள கற்பகாம்பாள் உடனுறை கபாலீசுவரர் கோவிலில் பங்குனி திருவிழா ஏப்ரல் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 12-ம் தேதி வரை திருவிழா விமரிசையாக நடைபெற உள்ளது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் வாகன சேவைகள் நடைபெறுகின்றன. விழா நிகழ்வுகள் தொடர்பான அட்டவணை வருமாறு:
2 ஏப்ரல், 2025 - புதன்
- இரவு 9.15 மணி - ஸ்ரீ நர்த்தன விநாயகர் வெள்ளி மூஷிக வாகனம்
3 ஏப்ரல் 2025 - வியாழன்
- காலை - கொடியேற்றம்
- இரவு 10 மணி - அம்பாள் மயில் வடிவில் சிவபூஜை காட்சி
4 ஏப்ரல் 2025 - வெள்ளி
காலை - 8.30 மணி - சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி வீதி உலா
இரவு - 9 மணி - சந்திர பிரபை வாகனத்தில் சுவாமி வீதி உலா
5 ஏப்ரல் 2025 - சனிக்கிழமை
காலை - 6 மணி - அதிகார நந்தி
இரவு - 9 மணி - பூதகி வாகனம்
6 ஏப்ரல் 2025 - ஞாயிறு
காலை - 8.30 மணி - புருஷாமிருக வாகனம், சிம்ம வாகனம்
இரவு - 9 மணி - நாகம், காமதேனு வாகனம்
7 ஏப்ரல் 2025 - திங்கள்
காலை - 8.30 மணி - சவுடல் விமானம் புறப்பாடு
இரவு - சுமார் 10.30 மணி - வெள்ளி ரிஷப வாகனம் )
8 ஏப்ரல் 2025 - செவ்வாய்
காலை - பல்லக்கில் சுவாமி வீதி லா
இரவு - 9 மணி - யானை வாகனம் புறப்பாடு
9 ஏப்ரல் 2025 - புதன்
காலை 7.15 மணிக்கு தேரோட்டம்
மாலை - தேரில் இருந்து சுவாமி திருக்கோவிலுக்கு எழுந்தருளல்
10 ஏப்ரல் 2025 - வியாழன்
பிற்பகல் - சுமார் 2.45 மணி - அறுபது மூவர் திருவிழா
இரவு - ஸ்ரீ சந்திரசேகரர் பார் வேட்டை விழா
11 ஏப்ரல் 2025 - வெள்ளி
காலை - பஞ்ச மூர்த்திகள் உலா
மாலை - சுமார் 6 மணி - பிக்சாடனர் வீதி புறப்பாடு
12 ஏப்ரல் 2025 - சனிக்கிழமை
காலை - திருக்கூத்தப் பெருமான் (ஸ்ரீ நடராஜர்) திருக்காட்சி
இரவு - சுமார் 6 மணி - புன்னை மரத்தடியில் மயில் உருவில் சிவபூஜை
இரவு - சுமார் 7.30 மணிக்கு - திருக்கல்யாணம்
நள்ளிரவு- கொடியிறக்கம், சண்டிகேஸ்வரர் திருவிழா
13 ஏப்ரல் 2025 - ஞாயிறு
காலை - உமா மகேஸ்வரர் தரிசனம்
மாலை - பந்தம் பரிவிழா
14-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை 10 நாட்கள் விடையாற்றி விழா நடைபெறும்.