
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுமி, சம்பவத்தன்று தனது தாய் மற்றும் பாட்டியுடன் சேர்ந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். வெயிலின் தாக்கம் காரணமாக வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு அவர்கள் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு 1 மணி அளவில் மர்மநபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து 6 வயது சிறுமியை தூக்கி சென்று விட்டார்.
அப்போது திடீரென எழுந்த சிறுமியின் தாய் மற்றும் பாட்டி கூச்சலிட்டனர். பின்னர் வீட்டின் பின்புறம் தேடிசென்ற போது அங்கு சிறுமி முதுகில் காயத்துடன் கிடந்தார். உடனே சிறுமியை மீட்டு விசாரித்த போது, மர்ம நபர் ஒருவர் சிறுமியை தூக்கி சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகிறார்கள்.