![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/09/38394964-10.webp)
திருச்சி,
மயிலாடுதுறை -செங்கோட்டை இடையே திருச்சி வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலை ஆலக்குடியில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல உத்தரவிட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை ஆகும்.
இதனை ஏற்றுக்கொண்ட தெற்கு ரெயில்வே தஞ்சாவூர்- திருச்சி அகலப்பாதையில் உள்ள ஆலக்குடி ரெயில் நிலையத்தில் நாளை (10-ந்தேதி) முதல் 3 மாத காலம் பரீட்சார்த்த அடிப்படையில் மயிலாடுதுறை- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் இரு மார்க்கத்திலும் நின்று செல்லும் என அறிவித்து உள்ளது.
இதன்படி மயிலாடுதுறை -செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் ஆலக்குடி ரெயில் நிலையத்திற்கு மதியம் 1.26 மணிக்கு வந்து 1.27 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்றும், செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் பிற்பகல் 2.06 மணிக்கு வந்து 2.07 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்றும் திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.