
மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதற்காக அந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, செங்கோட்டை-மயிலாடுதுறை ரெயில் (வ.எண்.16848) வருகிற 19-ந் தேதி, 21, 23, 24, 26, 28, 30 மற்றும் 31-ந் தேதிகளில் விருதுநகரில் இருந்து மதுரை வருவதற்கு பதிலாக மானாமதுரை, காரைக்குடி வழியாக மாற்றுப்பாதையில் திருச்சி செல்லும். இந்த ரெயில் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை மற்றும் காரைக்குடி ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
அதேபோல, மதுரை-கச்சிக்குடா வாராந்திர சிறப்பு ரெயில் (வ.எண்.07192) வருகிற 21-ந் தேதி மதுரையில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 12 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.