மயிலாடுதுறை அருகே மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து மாயம்.!

2 months ago 14
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று கடலில் தவறி விழுந்த மீனவர் மாயமாகிய நிலையில், அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. தரங்கம்பாடி பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள், கோடியக்கரைக்கு கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, மீனவர் பழனிவேல் விசைப்படகில் இருந்து தவறி விழுந்து கடலில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. சக மீனவர்கள் தேடி பார்த்த போது பழனிவேலை கண்டறிய முடியவில்லை என்பதால், கடலோர காவல்படையினர், மீன்வளத்துறையினர் படகுகள் மூலம் பழனிவேலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Read Entire Article