கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த CMRL ரூ.154 கோடியை ஒதுக்கி உள்ளது. இதன் மூலம் கோவையில் விரைவில் அலுவலகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்கு நிலம் எடுப்பதற்கான சர்வே தொடங்கி, பிறகு வருவாய்த்துறை மூலம் கையகப்படுத்தும் பணிகள் நடக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 34.8 கி.மீ நீளம் கொண்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் மூலதனச் செலவு ரூ.10 ஆயிரத்து 740 கோடி ஆகும். ட்ரோ திட்டத்தின் நடைமுறைகளை விரைவாக முடித்து செயல்படுத்தும் போது பொதுமக்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களை குறைப்பது, நிலத்தை கையகப்படுத்த திட்டம் தயாரித்தல், சாலை, மேம்பாலத்துடன் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பணிகள் தொடங்கி உள்ளன.
கோவையில் மெட்ரோ ரயில் நிறுவன அலுவலகம் அமைக்க மாநகராட்சி இடம் ஒதுக்க உள்ளது.
The post கோவை மெட்ரோ ரயில் திட்டப்பணிகள்: நிலம் கையகப்படுத்த முதற்கட்டமாக ₹154 கோடி ஒதுக்கீடு appeared first on Dinakaran.