மயான கட்டிடத்தை இடித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம் அறிவிப்பால் பரபரப்பு

4 weeks ago 5

 

அறந்தாங்கி,அக்.19: மயான கட்டிடத்தை இடித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம் அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் சமாதான கூட்டம் நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே திருநாளூர் தெற்கு கீழ குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்டிருந்த பொது மயானமாக எரிவூட்டும் தார்சு கட்டிடத்தை ஜேசிபி எந்திரம் மூலம் இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடவடிக்கை இல்லை என்றால் பொதுமக்களுடன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறந்தாங்கி ஊராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக துண்டு பிரசுரம் வெளியிட்டு இருந்தனர். இதையடுத்து இது குறித்து சமாதான கூட்டம் அறந்தாங்கி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் திருநாவுகரசு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மயான கட்டிடத்தை இடித்தவர்கள் மீது 3 தினங்களுக்குள் புகார் மனு பெறப்பட்டு காவல்துறையினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.

மேலும் இடிக்கப்பட்ட இடத்தில் ஒன்றிய பொது நிதியில் இருந்து 3 மாத காலத்திற்கு புதிய கான்கீரிட் மயானம் சுற்றுச்சுவருடன் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தாசில்தார் தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். கூட்டத்தில் மண்டல துணை தாசில்தார் பாலமுருகன், கிராம நிர்வாக அலுவலர்கள் அறந்தாங்கி போலீசார் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post மயான கட்டிடத்தை இடித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம் அறிவிப்பால் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article