மன்மோகன் சிங் மறைவு: காங்.அலுவலகத்தில் அஞ்சலி

3 weeks ago 5

 

ஈரோடு,டிச.28: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நலக் குறைவால் நேற்று முன் தினம் இரவு உயிரிழந்தார். இதையடுத்து, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று மன்மோகன் சிங் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமை வகித்தார்.ஈரோடு தொகுதி பொறுப்பாளரும், தொண்டாமுத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எம்.என்.கந்தசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மன்மோகன் சிங் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா,மண்டலத் தலைவர்கள் ஜாபர் சாதிக், விஜயபாஸ்கர்,பொதுக்குழு உறுப்பினர் மாரியப்பன்,தொழிலாளர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் குளம் ராஜேந்திரன், ஈரோடு நாடாளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜய்கண்ணா,என்.சி.டபிள்யூ.சி.தலைவர் கிருஷ்ணவேணி, முன்னாள் நகரத் தலைவர் குப்பண்ணா சந்துரு,சிறுபான்மைப் பிரிவு தலைவர் ஜூபைர் அகமது, துணைத் தலைவர் கே.என்.பாஷா, ஊடகப் பிரிவு தலைவர் முகமது அர்சத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

The post மன்மோகன் சிங் மறைவு: காங்.அலுவலகத்தில் அஞ்சலி appeared first on Dinakaran.

Read Entire Article