திருச்சி.ஜன.23: திருச்சி வனக்கோட்டம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பிப்.2ம் தேதி உலக ஈரநில நாள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. அதேபோல் இந்தாண்டு இந்த நாளினை முன்னிட்டு மாவட்ட அளவிலான ஓவியப்போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் விருப்பம் உள்ளவர்கள் தங்களது பள்ளி மற்றும் கல்லூரி வழியாக மாணவர்கள் ஜன.25ம் தேதி காலை 10 மணியளவில் புனித சிலுவை கல்லூரி தன்னாட்சி கல்லூரிக்கு நேரில் வந்து போட்டியில் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. பள்ளியை சேர்ந்த மாணவர்களுக்கான ஓவியப் போட்டிக்கான தலைப்பு Protecting Wetland for our Common Future என்ற தலைப்பின் கீழ் பங்கேற்கலாம்.
மேலும் அவர்களை 3 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் முதல் குழு – 1 – 5ம் வகுப்புகள் வரை, இரண்டாவது குழு – 6 – 8ம் வகுப்பு வரை, மூன்றாவது குழு 9 – 12ம் வகுப்பு வரை பிரித்து போட்டிகள் நடத்தப்பட உள்ளது. கல்லூரி மாணவர்களுக்கும் Protecting Wetland for our Common Future என்ற தலைப்பின் கீழ் ஓவிய போட்டியில் பங்கேற்கலாம். இந்த போட்டியில் பங்கு பெறும் மாணவ,மாணவிகள் தங்களின் வரைபடத்தில் ஈரநிலை தொடர்பான வாசகங்களை தவறாது குறிப்பிட வேண்டும். மேலும் வினாடி வினா போட்டியில் கலந்துகொள்ளலாம். போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு தமிழ்நாடு மாநில ஈரநில ஆணைய வழிகாட்டுதலின்படி பரிசுகள் வழங்கப்படும். மேலும் போட்டி தொடர்பான விவரங்களுக்கு 8667095032 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
The post உலக ஈரநில நாள் ஓவிய போட்டி: மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு appeared first on Dinakaran.