*தகுதியில்லாத 9வாகனங்களுக்கு நோட்டீஸ்
மன்னார்குடி : மன்னார்குடியில்,தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு நடந்தது.தகுதியில்லாத 9 வாகனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கூத்தாநல்லூர், நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர்களை அழைத்து வருவதற்காக பள்ளி நிர்வாகத்தினர் தனி வாகனங்களை பயன்படுத்து வருகிறார்கள்.அந்த வகையில் மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக மன்னார்குடி வட்டார போக்குவரத்து கழகத்துக்குட்பட்ட 23 பள்ளிக் கூடங்களில் மொத்தம் 120 வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், அந்த வாகனங்கள், மாணவர்கள் பயணம் செய்வதற்கு ஏற்ற தாக உள்ளதா? என்று ஆய்வு செய்ய வட்டார போக்குவரத்து அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, மன்னார்குடி, கூத்தாநல்லூர், நீடாமங்கலம் உள் ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்களில் பயன்படுத்தப்படும் 120 வாகனங்களை மன்னார்குடி அரசு உதவி பெறும் பின்லே மேல்நிலைப் பள்ளி மைதானத்தில்ஆய்வுக்கு வரவழைக்கப்பட்டது.
பின்னர், வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம், வருவாய் கோட் டாட்சியர் யோகேஸ்வரன், டிஎஸ்பி சரவணன், திருவாரூர் மாவட்ட கல்வி அலுவலர் இடைநிலை ராஜேஸ்வரி, மோட்டார் வாகன ஆய்வாளர் அசோக் குமார் ஆகியோர் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வு குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் கூறியதாவது, பள்ளி வாகனங்கள் முறையாக தகுதிச்சான்று பெற்றிருக்கின்றன வா? விபத்து சமயங்களில் மாணவர்கள் அவசரமாக வெளியேற வாகனங் களில் அவசர வழி உள்ளதா? மாணவர்கள் வெளியே தலையை நீட்டுவதை தடுக்க ஜன்னல் கம்பிகள் நெருக்கமாக இருக்கிறதா? முதலுதவி பெட்டிகள் உள்ளனவா? கதவுகளுக்கு பூட்டு உள்ளதா?, வேக கட்டுப் பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா?, ஜி.பி.எஸ். கருவியுடன் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப் பட்டுள்ளதா? என ஆய்வு செய்தோம்.
இதில் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்ல தகுதி இல்லாத 9 வாகனங்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப் பட்டுள் ளது. அந்த பஸ் டிரைவர்களும், இந்த ஆய்வில் பங்கேற்காத பள்ளி வாகனங்களும் , ஒரு வாரத்திற்குள் மீண்டும் வாகனத்தை ஆய்வுக்கு உட்படுத்தி, தகுதி சான்றிதழை கொடுத்து மீண்டும் இயக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை முருகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
The post மன்னார்குடியில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு appeared first on Dinakaran.