மன்னார்குடி, டிச. 21: சிறுமியர்களுக்கான சாரணர் இயக்கத்தை தலைமை ஏற்று நடத்திய ஆக்னஸ் பேடன் பவல் பிறந்த நாளையொட்டி சாரணியர்களுக்கு சீருடை வழங்கும் நிக ழ்ச்சி மன்னார்குடி அடுத்த 54,நெம்மேலி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தலைமையாசிரியர் மயில்வாகன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், மிட் டவுன் ரோட்டரி சங்கதலைவர் பன்னீர்ச்செல்வம், பள்ளியின் வழி காட்டி தலைவி எழிலரசி, ஆசிரிய பயிற்றுநர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சாரண- சாரணியர்களுக்கு விலையில்லா சீருடைகளை வழங்கினர்.
The post மன்னார்குடியில் சாரணர், சாரணியர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.