
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருமேனிஏரி கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் - மீனா தம்பதியின் மகள் அனுஷ்கா (12 வயது). 8-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலையில் வீட்டில் இருந்த அனுஷ்கா மின் மோட்டாரை இயக்குவதற்காக சுவிட்சை போட்டுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக சிறுமி மீது மின்சாரம் பாய்ந்தது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள் அனுஷ்காவை மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து திருமக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.