
ஐதராபாத்,
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா தற்போது தனது 12-வது திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இப்படத்திற்கு 'கிங்டம்' எனப்பெயரிடப்பட்டுள்ளது. கவுதம் தின்னனுரி இயக்கியுள்ள இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட், பார்ச்சூன் போர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ், சத்யதேவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் அடுத்த மாதம் 30-ம் தேதி வெளியாக உள்ளது.
சமீபத்தில் முதல் பாடல் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று அனிருத் தெரிவித்திருந்தநிலையில், தற்போது முதல் பாடலின் புரோமோ வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்த புரோமோ வருகிற 30-ம் தேதி வெளியாக உள்ளது.