போதைப் பொருள் விற்பனை தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் மகன் துக்ளக் கைது செய்யப்பட்ட வழக்கில் சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த அசாருதீன் மற்றும் நவாஸ் முகமத் என மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து 410 கிராம் ஓ.ஜி கஞ்சா, எடை இயந்திரம், 28 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாங்காக்கில் இருந்து போதைப் பொருட்களை இவர்கள் கடத்தி வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.