தாராபுரம், மே 15: தாராபுரம் பொள்ளாச்சி சாலை, பெஸ்ட் நகர், வரப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடமும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களையும் வழிமறித்து மிரட்டி தொடர் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களை தாராபுரம் உட்கோட்ட பிரிவு தலைமை காவலர்கள் கார்த்திக், மதியழகன், ராமர் உள்ளிட்டார் ஆய்வு செய்தனர்.அப்போது வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டது தாராபுரம் சென்னியப்பா நகரைச் சார்ந்த யாசர் அரபாத் (24) என்பது உறுதியானது. இதையடுத்து யாசர் அராபத்தை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழிப்பறி வழக்குகள் இருந்து சிறை தண்டனை பெற்று திரும்பி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலம்பாளையம் அரசு மருத்துவமனை
திருப்பூர் தெற்கு பகுதியில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்படுவதுபோல அனைத்து வசதிகளுடன் கூடிய வகையில் வடக்கு பகுதியில் 15 வேலப்பாளையத்தில் 80 படுக்கை வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை பன்னாட்டு கூட்டுறவு முகமையின் நிதி உதவியுடன் கட்டுப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இன்னும் அவை திறக்கப்படாமல் உள்ள நிலையில் வடக்கு பகுதியில் மக்கள் பல கிலோ மீட்டர் சென்று அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் விரைந்து 15 வேலம்பாளையம் அரசு மருத்துவமனையையும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
The post பொதுமக்கள்எதிர்பார்ப்பு: வழிப்பறி கொள்ளையன் கைது appeared first on Dinakaran.