போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனாவைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் ஹரேந்திர மவுரியா என்பவர், தனது, மூன்று மகள்கள், ஒரு மகனுடன் வசித்து வருகிறார். அவரது மகள்கள் ஹரேந்திரனை கடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ஹரேந்திராவின் மனைவி அவரது கால்களைப் பிடித்துக் கொண்டுள்ளார். ஆனால் அவரது மகள்கள் அவரை குச்சியால் அடித்து தாக்குகிறார்கள். வலியால் அலறும் தந்தையை காப்பாற்ற அவரது இளம் மகன் முயன்றார்.
தொடர்ந்து தனது சகோதரியைத் தடுக்க முயற்சிக்கிறான்; ஆனால் சகோதரனையும் அந்த சகோதரி அடிக்கிறார். ஹரேந்திரா தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சிக்கிறார். அதற்கு அவரது மனைவி அவரைத் தொடர்ந்து பிடித்துக் கொள்கிறார். இருந்தாலும் மகள்கள் ெதாடர்ந்து அவரை தாக்குகின்றனர். இந்த வீடியோ கடந்த பிப்ரவரி 1ம் தேதி வெளியானது. இந்த நிலையில் ஹரேந்திர மவுரியா இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘தனது மனைவியுடன் ஹரேந்திராவுக்கு அடிக்கடி சண்டை ஏற்படும். கடந்த 1ம் தேதி, தனது இரண்டு மகள்களின் திருமணத்தை நடத்தி வைத்தார். திருமண விழாவுக்குப் பிறகு, அவரது மனைவி தனது கணவரை விட்டு பிரிந்து தன்னுடைய தந்தையின் வீட்டிற்கு ெசன்றுவிட்டார். இதனால் மனமுடைந்த ஹரேந்திரா ஒரு அறையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். வீட்டை விட்டு அவர் வெளியே வராததால், அவரது குடும்பத்தினர் அவரைத் தேடத் தொடங்கினர்.
இந்த நிலையில் அவர் தங்கியிருந்த வீட்டின் கதவை திறந்து பார்த்த போது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்ப பிரச்னை காரணமாக ஹரேந்திரா தற்கொலை செய்து கொண்டதாக அக்கம்பக்கத்தினர் கூறினர். இருப்பினும், அவரது தந்தை மற்றும் சகோதரர், அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் மேல் நடவடிக்ைக எடுக்கப்படும். அப்போது தான் இறப்புக்கான காரணம் உறுதிப்படுத்தப்படும்’ என்றனர்.
The post மனைவியுடன் ஏற்பட்ட தகராறின் போது மகள்களால் தாக்கப்பட்ட தந்தை தூக்கிட்டு தற்கொலை: வீடியோ வைரலான நிலையில் திருப்பம் appeared first on Dinakaran.