மனைவியின் அக்காளுடன் உல்லாசமாக இருந்த கணவர்.... அடுத்து நடந்த கொடூரம்

2 days ago 2

கடலூர்,

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சோழத்தரம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 45 வயதுடைய பெண். இவருடைய கணவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். குழந்தை இல்லாத நிலையில் அந்த பெண் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இவருடைய தங்கை புவனகிரி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் தனது கணவர் மற்றும் 17, 15 வயது மகன்களுடன் வசித்து வருகிறார். இதில் ஒரு மகன் 10-ம் வகுப்பும், மற்றொரு மகன் 12-ம் வகுப்பும் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். கணவரை இழந்து தனிமையில் தவித்த அக்காளுக்கு தங்கையின் கணவர் அவ்வப்போது சிறு, சிறு உதவிகளை செய்து வந்துள்ளார்.

இதனால் இருவரும் அடிக்கடி சந்தித்து பழகி வந்துள்ளனர். நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை கள்ளக்காதலி வீட்டிற்கு தங்கையின் கணவர் சென்றார். அங்கு அவருடன் உல்லாசம் அனுபவித்துள்ளார். அந்த நேரத்தில் தங்கை அறுவடைக்கு மகன்களுடன் அங்கு சென்றிருந்தார்.

அப்போது அதே ஊரை சேர்ந்த சிலர், உனது கணவர் அக்காள் வீட்டில் இருப்பதாக கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தங்கை, தனது 2 மகன்களுடன் அக்காள் வீட்டிற்கு சென்றார். இவர்களை பார்த்ததும் கணவர், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உடனே தங்கை, எனது கணவருடன் ஏன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறாய்? என்று கேட்டு அக்காளுடன் தகராறில் ஈடுபட்டார். நீ உயிரோடு இருந்தால்தானே எனது கணவருடன் தொடர்பில் இருப்பாய் என்று கூறி அக்காளை தங்கை சரமாரியாக தாக்கினார். அவரது மகன்களும் அடித்தனர்.

பின்னர் 3 பேரும் சேர்ந்து சேலையால் அவரது கழுத்தை இறுக்கிக்கொலை செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 மகன்களுடன் தாயை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article