மனைவி விஷம் குடித்து தற்கொலை.. விசாரணைக்கு பயந்து கணவர் எடுத்த விபரீத முடிவு

1 week ago 3


நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் தியாகராஜன். இவருடைய மகள் கீதா (வயது 23). இவருக்கும், திருச்சி கொட்டாம்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் உறவினரான நந்தகுமார் (27) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பிறகு அவர் சரிவர வேலைக்கு செல்லாததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கீதா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து சமூகரெங்கபுரத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். இதனையடுத்து நந்தகுமார் அவ்வப்போது மனைவியை பார்க்க சமூகரெங்கபுரத்திற்கு வந்து சென்றுள்ளார்.

அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூகரெங்கபுரத்திற்கு வந்த நந்தகுமார் அங்கேயே வேலை செய்துவிட்டு மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காலையில் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் நந்தகுமார் வீட்டைவிட்டு வெளியே சென்று விட்டார்

இதில் மனமுடைந்து காணப்பட்ட கீதா வீட்டில் இருந்த ஹேர்டையை (விஷம்) குடித்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டநிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நந்தகுமார், மனைவியின் உறவினர்கள் தன்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம், மேலும் போலீசாரும் விசாரணைக்கு அழைத்து சென்று விடுவார்கள் என்ற அச்சத்தில் வீட்டுக்குள் சென்று மனைவியின் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Read Entire Article