தமிழக சட்டப்பேரவையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்புகள்:
* 22 மாவட்டங்களில் 27 புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களுடன் கூடிய குடியிருப்பு கட்டிடங்கள் ரூ.9.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
* வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரக அலுவலர்களுக்கு 2 புதிய வாகனங்கள், சார் ஆட்சியர்கள், துணை ஆட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்களுக்கு 153 புதிய வாகனங்கள் ஆக மொத்தம் 155 புதிய வாகனங்கள் ரூ.16.71 கோடியில் வழங்கப்படும்.
* கல்லூரிகளில் இளங்கலை பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக பேரிடர் மேலாண்மை குறித்த பாடம் அறிமுகப்படுத்தப்படும். மேலும் பள்ளிகளில் ஏற்கனவே உள்ள பேரிடர் மேலாண்மை பாடத்திட்டம் புதுப்பிக்கப்படும்.
* கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீட்டு மனை இல்லாத தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு பூமிதான நிலங்களில் இலவச வீட்டுமனை விநியோகம் பத்திரம் வழங்கப்படும்.
* மனைவரி விதிக்கப்பட்ட இடங்களில் வருவாய் பின்தொடர் பணிகளை மேற்கொண்டு 10,000 குடும்பகங்களுக்கு பட்டாக்கள் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
The post மனைவரி விதிக்கப்பட்ட இடங்களில் 10,000 குடும்பங்களுக்கு பட்டா: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் appeared first on Dinakaran.