போபால்,
மத்திய பிரதேச மாநில தலைநகரான போபாலில் பிச்சை எடுப்பதும், பிச்சை போடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை போபால் மாவட்ட கலெக்டர் நேற்று மாலை வெளியிட்டார்.இதன்படி, போபாலில் இனி பிச்சை போடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிச்சை எடுப்பவர்களை மீட்டு, அவர்களை தங்க வைக்க போபாலில் உள்ள கோலார் சமூக சுகாதார மையத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் கலெக்டர் கூறினார். முன்னதாக கடந்த ஆண்டு இந்தூர் நகரிலும் பிச்சை எடுக்க தடைவிதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.