மத்திய மந்திரி சுரேஷ் கோபி மீது வழக்குப்பதிவு

2 months ago 12

கொச்சி,

கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற பூரம் திருவிழா பகுதிக்குள் ஆம்புலன்சில் சென்ற விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது கேரள போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சி.பி.ஐ. தலைவர் அளித்த புகாரின் பேரில் திருச்சூர் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முன்னதாக திருச்சூர் பூரம் நிகழ்வின் போது நடிகர் சுரேஷ் கோபி ஆம்புலன்சை தவறாக பயன்படுத்தியதாக எப்.ஐ.ஆரில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதுதொடர்பான அந்த புகாரில் அனைத்து ஆம்புலன்ஸ்களுக்கான வழித்தடங்களும் முன்னரே தீர்மானிக்கப்பட்டதாகவும், அமைச்சர்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருவதற்கு  தடை விதிக்கப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மந்திரி சுரேஷ் கோபி இந்த விதிமுறைகளை மீறி, அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி, பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த விவகாரத்தில் முதலில், சுரேஷ் கோபி ஆம்புலன்சில் ஏறவில்லை என்று கூறினார், ஆனால் பின்னர் அதில் பயணம் செய்ததாக ஒப்புக்கொண்டார். கால் அசவுகரியம் காரணமாக ஆம்புலன்சை பயன்படுத்தியதாக அவர் விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article