மத்திய மந்திரி குமாரசாமி மீது வழக்குப்பதிவு

3 hours ago 3

பெங்களூரு,

ரூ.50 கோடி பணம் கேட்டு மிரட்டியதாக தொழிலதிபர் விஜய் டாடா புகாரில் மத்திய மந்திரி எச்.டி.குமாரசாமி மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விஜய் டாடா அளித்த புகாரில், "மதசார்பற்ற ஜனதா தள தலைவர் ரமேஷ் கவுடா ஆகஸ்ட் 24ஆம் தேதி தனது வீட்டுக்கு வந்தார்.

அப்போது மத்திய மந்திரி எச்.டி. குமாரசாமிக்கு போன் போட்டு என்னிடம் கொடுத்தார். என்னிடம் போனில் பேசிய குமாரசாமி சன்னபட்னா இடைத்தேர்தலுக்காக ரூ.50 கோடி பணம் கேட்டு மிரட்டினார். பணம் ஏற்பாடு செய்யவில்லை என்றால், ரியல் எஸ்டேட் தொழிலை நடத்த முடியாது என்றும் பெங்களூரில் பிழைப்பு கூட நடத்த முடியாது என்று மிரட்டினார். சன்னபட்னா தொகுதி இடைத்தேர்தலில் நிகில் குமாரசாமி (எச்.டி. குமாரசாமியின் மகன்) போட்டியிட உள்ளதாகவும் அதற்கு ரூ.50 கோடி தேவை என்று ரமேஷ் கவுடா மிரட்டினார் என்று தெரிவித்துள்ளார்.

சன்னபட்னா சட்டமன்ற உறுப்பினராக இருந்த எச்.டி. குமாரசாமி மண்டி மக்களவை தொகுதியில் வெற்றிபெற்று மத்திய மந்திரியாக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து சன்னபட்னா இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளராக நிகில் குமாரசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  

Read Entire Article