மத்திய பிரதேசம்: மகளுக்கு 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை - தலைமறைவான தந்தைக்கு போலீஸ் வலைவீச்சு

4 months ago 30

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் சத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயது நபர், கடந்த 4 ஆண்டுகளாக தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இது தொடர்பாக அந்த நபரின் மனைவியும், 21 வயது மகளும் லவ்குஷ் நகர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளனர்.

இதனிடையே தன் மீது புகார் அளிக்கப்பட்டதை அறிந்து சம்பந்தப்பட்ட நபர் தலைமைறைவாகி உள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அந்த நபர் தனது மகளை மைனர் சிறுமியாக இருந்த போதே பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் என்பதால், அவர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

Read Entire Article