மத்திய பிரதேசத்தில் லாரி மீது மோதிய கார் - 4 பேர் பலி

3 hours ago 1

போபால்,

மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டம் இந்தூர்-அகமதாபாத் நெடுஞ்சாலையில் இன்று காலை கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதில் 4 பேர் சென்று கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் பால்வாடி கிராமத்திற்கு அருகே காலை 7 மணியளவில் கார் சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரம் நின்றுகொடிருந்த லாரி மீது அதிவேகத்தில் மோதியது.

இந்த கோர விபத்தில் காரில் இருந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article