வேலூர் மாவட்டத்திற்கு மே 15-ம் தேதி உள்ளூர் விடுமுறை

3 hours ago 5

வேலூர்,

தமிழகத்தில் மிகவும் பிரபலமான திருவிழாக்களில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா முக்கியமான ஒன்றாகும். சிறப்பு வாய்ந்த கெங்கையம்மன் கோவில் திருவிழா அடுத்த மாதம் (மே) நடக்கிறது. இதனையொட்டி கோவிலில் பால் கம்பம் நடும் விழா கடந்த 7-ம் தேதி நடைபெற்றது. நாளை மறுநாள் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மே மாதம் 14-ந் தேதி தேர் திருவிழாவும், 15-ந் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழாவும் நடைபெறுகிறது. 16ம் தேதி புஷ்ப பல்லக்கும் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் வேலூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களி்ல் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மே 15-ம் தேதி வேலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Read Entire Article