'மத்திய பிரதேசத்தில் அமெரிக்காவை விட சிறந்த தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்' - நிதின் கட்கரி

1 week ago 2

போபால்,

மத்திய பிரதேச மாநிலத்தில் ரூ.5,800 கோடி மதிப்பிலான 10 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்கரி இன்று அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியின்போது அவர் பேசியதாவது;-

"மத்திய பிரதேசம் வேகமாக வளர்ந்து வருகிறது. எந்தவொரு நாட்டின் வளர்ச்சியிலும் உள்கட்டமைப்பு மேம்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது. நீர், மின்சாரம், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு உள்ள இடங்களில் தொழில்களும், வணிகமும் வளர்ச்சி அடையும்.

தொழில்களும், வணிகமும் வளரும் இடங்களில், வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். வேலைவாய்ப்பு இருக்கும் இடங்களில், வறுமை, பசி மற்றும் வேலையின்மை ஆகியவை இருக்காது.

உள்கட்டமைப்பு மேம்பாட்டில் மத்திய பிரதேசம் வேகமாக முன்னேறி வருகிறது. மத்திய பிரதேசத்தில் ஒரு ஆண்டுக்குள் ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்கள் நிறைவடையும். மத்திய பிரதேசத்தில் அமெரிக்காவை விட சிறந்த தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்."

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Read Entire Article