
வாஷிங்டன்,
அமெரிக்காவின் சிக்காகோ மாகாணத்தில் இந்திய இளைஞரான கேவின் பட்டேல் (வயது 28) வசித்து வந்தார். இவர் நேற்று முன் தினம் இரவு 9 மணியளவில் அப்பகுதியில் உள்ள பூங்காவுக்கு சென்றார்.
அப்போது அவரை மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த துப்பாக்கி சூடு சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து கேவின் பட்டேலை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கேவின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கேவின் பட்டேலை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பியோடியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.