மத்திய பிரதேசத்தில் 139 அடி ஆழமுள்ள போர்வெல் குழிக்குள் சிக்கிய 10 வயது சிறுவன்: நேற்றிரவு முதல் மீட்புப் பணிகள் தீவிரம்

3 weeks ago 5

குணா: மத்திய பிரதேசத்தில் 139 அடி ஆழமுள்ள போர்வெல் குழிக்குள் சிக்கிய 10 வயது சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டம் ராகோகர் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுவன் ஒருவன், எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். தகவலறி மீட்புக் குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து குணா மாவட்ட ஆட்சியர் சத்யேந்திர சிங் கூறுகையில், ‘சுமார் 139 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 10 வயது சிறுவன் சிக்கியுள்ளான், சனிக்கிழமை இரவு சம்பவம் நடந்துள்ளது.

போர்வெல் குழிக்குள் சிக்கியுள்ள சிறுவனுக்கு ஆக்சிஜன் மூலம் சுவாச வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மீட்புக் குழுவினர் பல்வேறு தொழில்நுட்ப கருவிகள் உதவியுடன் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். தற்போதைய நிலையில் ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவன், சுமார் 39 அடி ஆழத்தில் சிக்கியுள்ளான். சிறுவனை மீட்க 22 அடி ஆழத்தில் போர்வெல் குழிக்கு இணையான பக்கத்தில் இயந்திரங்களின் உதவியுடன் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது’ என்று கூறினார். காங்கிரஸ் எம்எல்ஏ ஜெய்வர்தன் சிங் உள்ளிட்ட பிரமுகர்களும் சம்பவம் நடந்த இடத்தில் நேற்றிரவு முதல் முகாமிட்டு தேசிய பேரிடரம் மீட்புக் குழுவினருடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post மத்திய பிரதேசத்தில் 139 அடி ஆழமுள்ள போர்வெல் குழிக்குள் சிக்கிய 10 வயது சிறுவன்: நேற்றிரவு முதல் மீட்புப் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article