விருதுநகர், ஜன.24: விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சத்திரரெட்டியபட்டி ஊராட்சியில் நூறு நாள் வேலை செய்யும் மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சத்திரரெட்டியபட்டி ஊராட்சியில் நூறு நாள் பணித்தள பொறுப்பாளராக ஞான பவானி என்பவரை கிராம மக்கள் ஒரு மனதாக தேர்வு செய்தனர்.
கிராமமக்கள் தேர்வு செய்த பணித்தள பொறுப்பாளரை விருதுநகர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் நியமனம் செய்வதில் கால தாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து சத்திரரெட்டியபட்டி ஊராட்சியில் நூறு நாள் வேலை செய்யும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தைக்கு பிறகு மக்கள் தேர்வு செய்த பணித்தள பொறுப்பாளரை நியமனம் செய்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
The post ஊராட்சி அலுவலகம் முற்றுகை appeared first on Dinakaran.