விருதுநகர், ஜன.24: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எஸ்தர் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை ரூ.3 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யும் அரசாணையை ரத்து செய்து, ஏற்கனவே நடைமுறையில் உள்ள சிறப்பு காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்ய வேண்டும்.
சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் வருவாய் கிராம உதவியாளர்கள் பெறுவதை போல் அகவிலைப்படியுடன் கூடிய மாதாந்திர ஓய்வூதியம் ரூ.6,750 வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் வழங்க வேண்டும். அரசு காலிப்பணியிடங்களில் பணி மூப்பு அடிப்படையில் முன்னுரிமை அளித்து காலமுறை ஊதியத்தில் பதவி உயர்வு அளிக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் பெண் சத்துணவு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
The post சத்துணவு ஊழியர் உண்ணாவிரதம் appeared first on Dinakaran.