மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தொடர்ந்த வழக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்

3 weeks ago 5

சென்னை: கடந்த 2011-15ம் ஆண்டுகளில் மறைந்த ஜெயலலிதாவின் அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் ஆஜராகினர். வழக்கில் 2,202க்கு மேற்பட்டவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இந்த நிலையில், வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள முதல் 100 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அவர்களில் சிலர் நேற்றைய விசாரணைக்கு ஆஜராகாததையடுத்து அவர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட மேலும் 50 பேருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 25ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

The post மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தொடர்ந்த வழக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.

Read Entire Article