மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்துக்கு எதிர்ப்பு ஏன்? - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

6 hours ago 3

காஞ்சிபுரம்: “விஸ்வகர்மா திட்டம் மூலம் மத்திய பாஜக அரசு குலத் தொழிலை ஊக்குவிக்க பாடுபடுகிறது. அந்தத் திட்டத்தில் மூன்று முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள வலியுறுத்தினோம். ஆனால் அதை மத்திய அரசு ஏற்கவில்லை. எனவே,அத்திட்டத்தை எதிர்க்கிறோம்.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞர் கைவினைத் திட்டத்தை இன்று (ஏப்.19) தொடங்கி வைத்தார். இவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “பாஜக அரசு கடந்த 2023-ம் ஆண்டு ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அதன் பெயர் என்ன தெரியுமா? “விஸ்வகர்மா திட்டம்” 18 வகையான கைவினைக் கலைஞர்களுக்கு, திறன் பயிற்சி வழங்கி, மூன்று லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டம் என்று சொன்னார்கள்.

Read Entire Article