மத்திய அரசின் விவசாய காப்பீட்டு நிறுவனத்தில் வேலை;மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவி

1 week ago 2

இந்தியாவின் வேளாண் காப்பீட்டு நிறுவனம் (ஏஐசி)மேனேஜ்மென்ட் டிரெய்னி (எம்டி) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது . விவசாயத் துறைக்கான காப்பீட்டுத் தீர்வுகளை வழங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட முன்னணி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற இது ஒரு பொன்னான வாய்ப்பு. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவர அறிவிப்பைப் பார்க்கலாம்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 55

பணி: மேலாண்மை பயிற்சியாளர் வேலை(Management Trainee)

பணி விவரம்:

மேலாண்மை பயிற்சியாளர்கள் (IT) - 20

மேலாண்மைப் பயிற்சியாளர்கள் (ஆக்சுவேரியல்) - 05

மேலாண்மை பயிற்சியாளர்கள் (பொது) - 30

சம்பளம்: ரூ.50,925 முதல் ரூ.96,765/- வரை

வயது: குறைந்தபட்ச வயது: 21 ஆண்டுகள் & அதிகபட்ச வயது: 30 ஆண்டுகள்

வயது தளர்வு: மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

எஸ்.சி/எஸ்.டி(SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகள்

ஓபிசி(OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகள்

பொதுப்பிரிவு(GEN) மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள்

கல்வித்தகுதி:அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு /முதுகலை பட்டம்/ பி.இ / பி.டெக் / எம்.இ/ எம்.டெக்

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு,நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ibpsonline.ibps.in/aicildec24/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.1,000. எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி:20/02/2025

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் காணலாம்.

Read Entire Article