மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு கருப்​பு கொடி காட்ட முயற்சி: முன்னெச்​சரிக்கையாக காங்​கிரஸ் கட்சி​யினர் கைது

1 month ago 3

மாமல்​லபுரம்: தனியார் நட்சத்திர சொகுசு விடு​தி​யில் நடைபெற்ற முன்​னாள் குடியரசு துணை தலைவர் வெங்​கய்ய நாயுடு​வின் பேரன் திருமண விழா​வில் பங்கேற்க வந்த மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக, கருப்​புக்​கொடி காட்டு​வதற்காக தனியார் விடு​தி​யில் தயாராக இருந்த காங்​கிரஸ் கட்சி​யின் தேசிய செயலாளர் விஸ்​வநாதன் உட்பட 2-க்​கும் மேற்​பட்ட காங்​கிரஸ் கட்சி​யினரை முன்னெச்​சரிக்கையாக போலீ​ஸார் கைது செய்​தனர்.

செங்​கல்​பட்டு மாவட்​டம், மாமல்​லபுரத்​தில் உள்ள தனியார் நட்சத்திர சொகுசு விடு​தி​யில் முன்​னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்​கய்ய நாயுடு​வின், பேரன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்​றது. இதில், குடியரசு துணை தலைவர் ஜகதீப்​தன்கர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் 8 மாநில ஆளுநர்​கள், மத்திய அமைச்​சர்கள் என பலர் கலந்​து​கொண்​டனர். முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சென்னையி​லிருந்து கிழக்கு கடற்கரை சாலை மார்க்​கமாக விழா நடைபெற்ற சொகுசு விடு​திக்கு வந்தார்.

Read Entire Article