மதுரையில் தங்கும் விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

3 months ago 25

மதுரை,

நாடுமுழுவதும் சமீப நாட்களாக ரெயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மதுரையில் உள்ள 4 தங்கும் விடுதிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட தங்கும் விடுதிகளில் விரைந்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் வளாகம் முழுவதும் தீவிர சோதனையிட்டனர். சோதனையில் எந்த பொருளும் சிக்காததை அடுத்து வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் 4 இடங்களில் வெடிகுண்டு-ஆ..? - பதற்றமான தூங்காநகரம்#madurai #hostel #ThanthiTV pic.twitter.com/gGshJqMLT1

— Thanthi TV (@ThanthiTV) October 2, 2024

Read Entire Article